🎯

குறிக்கோள்

  • உலகெங்கும் உள்ள தமிழ் ஆராய்ச்சியாளர்களை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு நாட்டின் தலைநகரிலும் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவது.
  • உலகத் தமிழ் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து தகுதிவாய்ந்த, தமிழறிஞர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுவது.
  • தமிழ் ஆராய்ச்சி நூலகத்துடன் வாசகர் சாலை ஒன்றும் நிறுவுவது.
  • ஆண்டுக்கு இருமுறை தமிழகத்திலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் தமிழறிஞர்களை அழைத்து தமிழ் ஆராய்ச்சி விழா நடத்துவது.
🏁

இலக்கு

  • தலைமை ஆராய்ச்சி மையத்தை மையமாக வைத்து ஒவ்வொரு நாட்டிலும் உலக தமிழ் ஆராய்ச்சி மையத்தின் கிளைகள் நிறுவுவது.
  • உலகத் தமிழ் ஆராய்ச்சியாளர்களின் நிகழ்வுகளையும் படைப்புகளையும் பற்றி உலகத் தமிழர்கள் அறிந்துகொள்ள தனிச் சுற்றறிக்கை இதழ் ஒன்று துவங்குவது.
  • வருகை தரும் அயல்நாட்டு தமிழறிஞர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து, மையத்தின் வழியாக பாராட்டு விழாவும் நடத்துவது.
  • தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் வரலாறு தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு உதவித்தொகை வழங்குவது.
✍

செயல்பாடு

  • தமிழறிஞர்களை வைத்து மாதம் இருமுறை திருக்குறள், கம்ப இராமாயணம், சிலப்பதிகாரம் வகுப்புகள் நடத்துவது.
  • மாதம் தோறும் தமிழ் அறிஞர்களை அழைத்து இயல், இசை, நாடகம் மற்றும் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்துவது.
  • புலம் பெயர்ந்த தமிழர்களின் குடும்பங்களில் உள்ள தமிழ் குழந்தைகளுக்கு தமிழில் எழுதவும், பேசவும், படிக்கவும் மாலை நேர வகுப்புகள் நடத்துவது.
  • தமிழ் மொழி ஆராய்ச்சி சார்ந்த கருத்தரங்குகளும் பட்டிமன்றங்களும் ஆண்டு முழுவதும் நடத்துவது.
📄

பதிவு

  • இம்மையத்திற்கு உலகலாவிய தமிழறிஞர்கள் ஆலோசகர்களாகவும், தமிழகத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். எனவே தாங்கள் அருள்கூர்ந்து இசைவு தர கடிதத்தின் வழியாக தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
  • இசைவுக் கடிதத்தினை எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தவுடன் முறையாக தீர்மானம் போட்டு மையத்தை பதிவு செய்திட வசதியாக இருக்கும் என அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
  • தங்களது ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் படைப்புகளையும் எங்களுக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன் கோருகிறோம். தகுதிவாய்ந்த படைப்புகள் மையத்தின் வெளியீடுகளில் இடம்பெறும்.